ஜேர்மனியின் A2 நெடுஞ்சாலையில், சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 2.48 மணியளவில், Magdeburg என்னுமிடத்துக்கு அருகில் நிகழ்ந்த அந்த விபத்தில், இருவர் பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 

விமானம் தரையில் மோதியதும் தீப்பற்றியுள்ளது. மீட்புக்குழுவினரால் இரண்டு பேருடைய உயிரற்ற உடல்களையே மீட்க முடிந்துள்ளது.

எதனால் இந்த விபத்து நேரிட்டது என்பது தெரியவராத நிலையில், பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.