பிரான்ஸ் கலவர பூமியாகியுள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானுக்காக, பதுங்கு குழி ஒன்று பாரீஸுக்கு வெளியே உருவாக்கப்பட்டுள்ளதாக தி டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சில், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு, மாணவர் போராட்டங்கள் என துவங்கிய பேரணிகளில், பின்னர் வன்முறை வெடித்துள்ளது. 

இந்நிலையில், கலவரக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை தாக்க முற்படுவார்களானால், அவர்களிடமிருந்து ஜனாதிபதியை பாதுகாப்பதற்காக, தலைநகர் பாரீஸுக்கு வெளியே ஒரு பதுங்கு குழி உருவாக்கப்பட்டுள்ளதாம்.

புலனாய்வுப் பத்திரிகையாளர்களான Pierre Gastineau, Antoine Izambard மற்றும் Franck Renaud ஆகியோர் எழுதிய La Nouvelle Armée des Ombres (The New Army of Shadows) என்ற புத்தகத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதாவது, 2018ஆம் ஆண்டு, மஞ்சள் மேலாடை போராட்டங்களுக்கிடையில் மேக்ரான் Le Puy-en-Velay நகருக்குச் சென்றபோது, ஒரு கூட்டம் கோபத்துடன் ஜனாதிபதியை சூழ்ந்துகொண்டு முழக்கம் எழுப்பியதுடன், அவரது வாகனமும் பின் தொடரப்பட்டது. 

அந்த சம்பவம் உருவாக்கிய அதிர்ச்சியே, இப்படி ஒரு பதுங்குகுழியை உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாக ஒருவகையில் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆக, இப்போது பிரான்சில் சூறையாடல்களும் தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்துவரும் நிலையில், கலவரக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நெருங்குவார்களானால், ஜனாதிபதியை பாதுகாப்பதற்காக இந்த பதுங்கு குழி உருவாக்கப்பட்டுள்ளதாக La Nouvelle Armée des Ombres புத்தகத்தை மேற்கோள் காட்டி தி டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், மேக்ரான், 148 மில்லியன் யூரோக்கள் செலவில் ஒரு ஆடம்பர பதுங்கு குழியை உருவாக்குவதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவியது.

ஆனால், அது ஒரு வதந்தி, அந்தச் செய்தியில் உண்மையில்லை என்பது ஏற்கனவே Fact-checking அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.