தமிழ்நாட்டிலும் திமுக - காங்கிரஸ் குழப்ப அணியாகத்தான் இருக்கிறது.. புதுச்சேரியிலும் அதேபோல் குழம்பிப்போன அணியாக தான் இருக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய், பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசும்போது, “புதுச்சேரியில் தவெக போட்டியிடுகிறது. நமது கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
மக்களுடன் மக்களாக இருப்பவர்களைத் தான் நமது கட்சியின் வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளேன். நமது வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கூட்டணி 5, 6 முறை ஆட்சியில் இருந்தது. அந்த கூட்டணியில் இருந்த ஒரு தலைவர் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை, அவரது தலைவரையே எப்படி ஏமாற்றினார் என்பதை உலகமே பார்த்து சிரித்தது. தற்போது அந்தக் கட்சி இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
‘‘திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு குழப்ப அணி’’: விஜய் விமர்சனம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space