துங்கல்பிட்டியவில்  படகு மூலம் கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 128 கிலோ கிராம் மற்றும் 500 கிராம் பீடி இலைகள் திங்கட்கிழமை (05) பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

துங்கல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  இரகசியத்  தகலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே  128 கிலோ கிராம் மற்றும் 500 கிராம் பீடி இலைகள் உரிமம் இல்லாத படகு மூலம் கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக  தெரியவந்துள்ளது.

பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் போது சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவர்களைக் கைது செய்வதற்காக  பொலிஸார்  மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.