மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் இராணுவ விமானமொன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இராணுவ விமானம் 32 பயணிகளுடன் பெனின் நகரிலிருந்து லகோஸ் நகருக்கு நேற்று திங்கட்கிழமை (5) புறப்பட்டதையடுத்து, லகோஸ் நகருக்கு அருகில் விமானம் ஆற்றில் விழுந்துள்ளது. 

அதனையடுத்து, மீட்புக் குழுவினர் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று, விமானத்தின் சில உடைந்த பாகங்களையும் உயிரிழந்த சிலரது உடல்களையும் மீட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த மேலும் சிலரது உடல்கள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் குறித்து கண்டறிவதற்கான விசாரணைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.