தேர்தல் கருத்து கணிப்பைவிட, மே 4-ம் தேதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம் என்று நடிகரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, அவரது மனைவி குஷ்பு, மகள், நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா ஆகியோர் வெள்ளிக்கிழமை (மே 1) பழநிக்கு வந்தனர்.
பழநி மலை அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் (வின்ச்) மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற அவர்கள், அங்கு வைதீகாள் அலங்காரத்தில் தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
“தேர்தல் கருத்து கணிப்பை விட மே 4-ல் வர உள்ள மக்கள் தீர்ப்பே முக்கியம்” - சுந்தர்.சி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space