விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கில் முன்னிலைப்படுத்துவதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.