ஞானசாரதேரர் விடையத்தில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கௌரமாக ஏற்றுக் கொள்கின்றோம் இதனை எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது.

என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்தவர் என்ற அடிப்படையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளியிட்டவர் என்ற அடிப்படையிலும் அவருக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இப்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைவாக அவர் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

ஞாயிற்றுக்கிழமை (18.10.2026) மாலை மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திக்கும் போதே அவர்தான் போது தெரிவித்தார் இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம் அந்த அடிப்படையில் ஞானசாரர் விடயத்தில் எதிர்க்கட்சியினர் நிறைவேற்றதுறையினர் இதில் தலையீடு செய்து உடனடியாக ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கூறுகின்றார்கள்.

நீதி மன்றத்தை அவமதித்த ஒருவரை முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்கிய ஒருவரை இவ்வாறு விடுதலை செய்து கொண்டிருந்தால் தொடர்ந்தும் இந்த நாட்டில் இனவாதம் என்பது தலைவிரித்து ஆடுகின்ற ஒரு நிலைமை காணப்படும். ஆகவே எம்மை பொறுத்தவரையில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கௌரமாக ஏற்றுக் கொள்கின்றோம் இதனை எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது. என அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.