அவனை நாங்கள்

நினைவுகூர வேண்டியதில்லை.

அதையும்,

அவர்களே செய்வார்கள்.

தங்கள்

இருளின் நிழல்களை

அவனது

அகலின் ஒளியால் போர்த்துவார்கள்.

தீபத்தை

அவர்களே சுமந்து வந்து

அவர்களே எடுத்துச் செல்வர்.

அது

வரலாற்றின் வழியெங்கும்

ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.

அப்படித்தான் அவன்.

நின்றாடும்

பசியின் சுடர்

காற்றுக்கும் சொந்தம்.

- தீபிகா-

27.09.2026