தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் இயங்கிவரும் பண்டுகஸ்நுவர பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தின் கீழ் இயங்கும் பண்டுகஸ்நுவர பிரதேச சபையில் மொத்தமாக 38 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அதில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, சுயாதீன ஐக்கிய தேசிய கட்சி, சர்வஜன அதிகாரம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என கூட்டு எதிர்க்கட்சி 22 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
பிரதேச சபையின் பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (30) சபையின் தலைவர் கருணாஜி சாகர தலைமையில் கூடியது. இதன்போது அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் தலைவரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இறுதியாக வரவு செலவு திட்டம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக 20 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன் பிகாரம் வரவு செலவு திட்டம் 2 மேலதிக வாக்களால் தோல்வியடைந்தது. வரவு செலவு திட்டத்துக்கு ஆளும் கட்சியுடன் இணைந்து அகில இவங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவாக வாக்களித்திருந்தார்.
பண்டுகஸ் நுவர பிரதேச சபையில் கூட்டு எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கின்றபோதும் 17 உறுப்பினர்களைக்கொண்ட தேசிய மக்கள் சக்தியே ஆட்சி செய்துவருகிறது. பிரதேசசபையை அமைப்பதற்கு இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்திக்கே அதிகாரம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.