பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்
vidiyel 25 மாசி 2026 · 16:29 1 views
Ad Space
Ad Space
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் (25) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது “PTAஐ நீக்கு! PSTA சட்ட வரைவை மீள பெறுக”, “ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்”, “நீதித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்”, “மனித மாண்பு பேணப்பட வேண்டும்”, “உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்”, “அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக எமது குரலை வலுப்படுத்துவோம்”, “மக்கள் நலன் கருதி ஒருமைப்பாட்டுடன் செயற்படுவோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.