பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோருக்கு கொலை மிரட்டல்
Ad Space
Ad Space
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராக விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இன்று புதன்கிழமை (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எவ். யூ வூட்லர் இதனை தெரிவித்தார்.
அவிசாவளை பொலிஸ் பிரிவில் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Ad Space
Ad Space