நேற்றுத் திங்கட்கிழமை (26.10.2026) காலை-08.30 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை (27.10.2026) காலை-08.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 81.09 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பருத்தித்துறையில் பதிவாகியுள்ளது. திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தினர் குறித்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் இரண்டு தினங்களாக நீடித்திருந்த அடைமழை நிறைவடைந்து இன்று செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் இயல்பு நிலை வழமைக்குத் திரும்பியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.