யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், வளலாய் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், விண்மீன் விளையாட்டுக் கழகம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு என்பன இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (15.11.2026) காலை-08.30 மணி முதல் யாழ்.பலாலி அந்தோனிபுரம் வனத்து அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கி உயிர் காக்கும் உன்னத பணிக்குப் பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.