பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே (01) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வன்முறையைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் ரேஞ்சர்ஸ் (Rangers) படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கற்களை வீசித்தாக்குதல்

எம்.டி. கான் வீதியில் (MT Khan Road) உள்ள தூதரகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், தூதரக வளாகத்திற்குள் நுழைய முற்பட்டதுடன் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.   இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாரும் துணை இராணுவப் படையினரும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன், தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றுள்ளனர். அமெரிக்க படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டமையை கண்டித்து அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானிலும் ட்ரம்பிற்க எதிராக (01) இன்று போராட்டம் வெடித்துள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அமெரிக்க தூதரகத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. தூதரக வளாகத்திற்குள் புகுந்தவர்கள் அங்கிருந்த பொருட்களுக்கும் தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது நிலைமை கட்டுப்படுத்த அங்கு இருந்த பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பாகிஸ்தானிலும் வெடித்தது போராட்டம்! தரைமட்டமாக்கப்பட்ட தூதரகம்: துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி | Protest Against The Us In Pakistan Attack Embassy   இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.

நேச நாடுகளில் பதற்றம்

  இதனால் அமெரிக்காவின் நேச நாடுகளில் பதற்றம் நீடித்துள்ளதுடன், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, காமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.