பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) தடம்புரண்டதில் 06 பேர் உயிரிழந்துள்ள உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கராச்சியிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்த ரெயிலில் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்ததாகவும் அதிகாலை சுமார் 5.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடுகதி ரயிலின் 14 பெட்டிகளும் பாலத்திற்கு அருகே தடம்புரண்டதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
