பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணமாக இன்று சனிக்கிழமை (23)) சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சூ நகரை சென்றடைந்தார்.
இன்று முதல் மே 26ஆம் திகதி வரை அவரது உத்தியோகபூர்வ விஜயம் அமையவுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவை இரு நாடுகளும் இந்த ஆண்டில் கொண்டாடும் வேளையில், பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான மிக முக்கியமான உயர்மட்ட விவாதமாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமரின் இந்த வருகை குறித்து சீன வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
"சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இந்த அதிகாரப்பூர்வ விஜயத்தை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி, தங்களின் பாரம்பரிய நட்புறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளன.
மேலும், அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும், புதிய யுகத்தில் இன்னும் நெருக்கமான 'சீன - பாகிஸ்தான் பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான சமூகத்தை' கட்டியெழுப்புவதில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கும் சீனா விரும்புகிறது என்று கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் சீனாவுக்கு விஜயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space