மறைந்த பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கத்தின் 45 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை ( 21.11.2026) காலை-09 மணியளவில் யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைச் சிரேஷ்ட பேராசிரியரும், சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனர்களில் ஒருவருமான கே.ரி. கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 

இந்  நிகழ்வில் இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் நேரடியாகக் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.