பிரித்தானிய பிரதிப் பிரதமர் சிறிலங்கா வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை
vidiyel 17 மாசி 2026 · 08:35 2 views
Ad Space
Ad Space
பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவும், 'டித்வா' (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரித்தானியாவின் மனிதாபிமான உதவிகளைப் பார்வையிடுவதற்காகவும் பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லமி இன்று ( பெப்ரவரி 17 ) செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை பிரதிப் பிரதமர் சந்தித்து பொருளாதார ஒத்துழைப்பு, நல்லிணக்கம், மனிதாபிமான முன்னுரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய சாசனம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
கடந்த ஆண்டின் இறுதியில் நாடளாவிய ரீதியில் சேதங்களை ஏற்படுத்திய 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானியாவின் உதவிகளை வழங்கும் மனிதாபிமான உதவிப் பங்காளர்களையும் அவர் இதன்போது சந்திக்கவுள்ளார்.