தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை இன்று நடத்துகிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) சட்டசபையில் அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் ஒருவர் முன்மொழிய, அதில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றுவார்.
எதிர்க்கட்சியினரும் இதில் உரையாற்றுவார்கள். அதன் பிறகு அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர் யாராவது எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கேட்டால், அந்த வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிடுவார். அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்ப்போரின் எண்ணிக்கையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார்.
சட்டசபையில் வீற்றிருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 என்ற எண்ணிக்கையை தீர்மானம் பெற வேண்டும்.வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார். வெற்றி பெற்றுவிட்டால் அரசு தனது பணியை தொடர்ந்து நடத்தும். ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால். அது கவர்னருக்கு தெரிவிக்கப்படும்..இதனையடுத்து, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்தார். நம்பிக்கை தீர்மானம் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.தவெக அரசுக்கு ஆதரவாக எங்கள் தரப்பு எம்எல்ஏக்கள் வாக்களிப்பர் என்று சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
இதைபோல தவெகவுக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம் என எடப்பாடி பழனிசாமி அணி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி பங்கேற்க கூடாது என இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அவர் சட்டசபைக்கு வரவில்லை. மேலும் இந்த தடை உத்தரவுக்கு எதிராக த.வெ.க., எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இது இன்று விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மையை நிரூபிக்குமா தவெக...? நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space