முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனது வெற்றிக்கு உந்துசக்தியாகவும், ஆன்மிக வழிகாட்டியாகவும் திகழ்ந்த ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு முக்கிய அரசுப் பதவியை விஜய் வழங்கியுள்ளார்.
இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மிக ஆலோசகராகவும் அறியப்படுகிறார். “2026 தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்வராவார்” என ராதன் பண்டிட் வெளியிட்ட கணிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. அவர் கணித்தபடியே இன்று விஜய் முதல்வராக அரியணையில் அமர்ந்துள்ளார்.
இந்நிலையில், தனது நம்பிக்கைக்குரிய ஆலோசகரான ராதன் பண்டிட் வெற்றிவேலை, ‘தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி’ ஆக நியமித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழக முதல்வரின் அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார். அவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும். இதற்கான பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்துத் தனியாக அறிக்கை வெளியிடப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பதவி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space