திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்​னேரி அருகே உள்ள ஏறுசிவன் ஊராட்​சி​யில் நேற்று முன்​தினம்மாலை ஆடு மேய்க்​கச் சென்ற சிலர், அங்​குள்ள மரத்​தின் கீழே சுமார் 2 அடி உயர​முள்ள உலோகத்​தாலான மகா விஷ்ணு சிலை இருப்​ப​தைப் பார்த்​தனர்.

இது​குறித்து அவர்​கள் அளித்த தகவலின் பேரில் வரு​வாய்த் துறை அதி​காரி​கள் விரைந்து சென்று சிலையை மீட்டு பொன்னேரி வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​துக்கு கொண்டு சென்​றனர்.

4 கரங்​களு​டன் காட்​சி​யளிக்​கும் மகா விஷ்ணு சிலை​யின் ஒருகையில் சுதர்​சனச் சக்​கர​மும், மற்​றொரு கையில் சங்​கும் இடம் பெற்​றுள்​ளது. பல நூற்​றாண்​டு பழமையான பல கோடி ரூபாய் மதிப்​பிலான இந்த சிலை, மரத்​தின் கீழே வந்​தது எப்​படி என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

இந்​நிலை​யில் சென்னை சிலை கடத்​தல் தடுப்​புப் பிரிவு துணை காவல் கண்​காணிப்​பாளர் சம்​பத் நேற்று பொன்​னேரிவட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில்

வைக்​கப்​பட்​டுள்ள மகா​விஷ்ணு சிலையை, வட்​டாட்​சி​யர் ஜெய்​கர்​பிரபு முன்​னிலை​யில், பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார்.

தொடர்ந்து அவர் தலை​மையி​லான போலீ​ஸார், சிலை கடத்​தல் கும்​பலைச் சேர்ந்​தவர்​கள் ஏதாவது ஒரு கோயி​லி​லிருந்து சிலையை திருடிவந்து கடத்த திட்​ட​மிட்ட நிலை​யில், போலீ​ஸாருக்கு பயந்து சிலையை இங்கே வைத்​து​விட்டு சென்​றனரா என விசா​ரித்து வரு​கின்​றனர்.

மேலும் அந்த சிலை எந்த உலோகத்​தாலானது, எந்த கால​கட்​டத்​தைச் சேர்ந்​தது என்​பது தொடர்​பாக தொல்​லியல் துறை ஆய்​வுக்கு உட்​படுத்த நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.