வ.உ.சி. நினைவு தினத்​தில் முதல்​வர் விஜய் நேரில் மரியாதை செலுத்த வேண்​டும் என வ.உ.சி. சங்​கங்​கள் சார்​பில் லைஃப்​லைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்​து​வ​மனைகள் குழு​மத் தலை​வர் டாக்​டர் ஜே.எஸ்.ராஜ்குமார் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறிய​தாவது: நாட்​டின் சுதந்​திரத்​துக்​காக தனது உடல், பொருள், ஆவியை தியாகம் செய்​தவர் வ.உ.சிதம்​பரம் பிள்ளை. ஏழை, எளிய மக்​களுக்கு உதவியதுடன், நாட்​டின் பொருளாதார முன்​னேற்​றத்​துக்​காகவும் பாடு​பட்​டார். ‘மேக் இன் இந்​தியா’, ‘ஸ்​டார்ட் அப் இந்​தியா’ என்று இப்​போது பேசுகிறோம்.

1905, 1906-ம் ஆண்​டுகளி​லேயே உள்​நாட்டு உற்​பத்தி மற்​றும் தொழில் தொடங்​கு​வதற்​கான முன்​னெடுப்​பு​களை அவர் மேற்​கொண்​டார். இருப்​பினும், அவர் தமிழர் என்​ப​தாலேயே பெரிய அளவில் கொண்​டாடப்​பட​வில்லை.

அனைவரும் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு, தியாகத்தை தெரிந்​து​கொள்ள வேண்​டும். நவ.18-ம் தேதி அவரது நினைவு நாளில் அவரது சிலைக்கு முதல்​வர் விஜய் மாலை அணி​வித்து மரியாதை செலுத்தி, அவர் இழுத்த செக்​கையும் பார்​வை​யிட வேண்​டும் என்​ப​து​தான் எங்​களது ஒரே வேண்​டுகோள்.

கடந்த 2005-ல் அப்​போதைய முதல்​வர் ஜெயலலிதா, வ.உ.சி. நினைவு தினத்​தில் நெல்​லைக்கு வந்து, மணிமண்​டபம் அமைத்​துக் கொடுத்து மரியாதை செலுத்​தினார்.

அதன்​பிறகு எந்த முதல்​வரும் நேரில் வர​வில்லை. எனவே, இந்த ஆண்டு நெல்லை, ஓட்​டப்​பிடாரம் அல்​லது கிண்​டி​யில் நடை​பெறும் நினைவு தின நிகழ்ச்​சி​யில் முதல்​வர் விஜய் பங்​கேற்று வ.உ.சி.க்கு மரியாதை செலுத்த வேண்​டும். வ.உ.சி. குறித்து நான் எழுதிய புத்​தகத்தை அரசு நூல​கங்​களில் இடம்​பெறச் செய்ய வேண்​டும்.

வறுமையில் வாடும் அவரது குடும்​பத்​தினருக்கு உதவி​கள் வழங்க வேண்​டும். தூத்​துக்​குடி​யில் வ.உ.சி. வாழ்ந்த இடத்தை அருங்​காட்​சி​யக​மாக மாற்ற வேண்​டும்.இவ்​வாறு அவர் கூறினார்.