மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் தீ விபத்து : கடை முற்றாக எரிந்து நாசம்
Ad Space
Ad Space
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள கடையொன்றில் இன்று சனிக்கிழமை (20) பகல் ஏற்பட்ட தீ பரவினால் கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
குறித்த கடை உரிமையாளர் பகல் சாப்பாட்டுக்காக கடையை மூடி விட்டு அவரது வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயில் எரிந்தது புடவைக் கடை என்றும் அது முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது என்றும் அக்கடைக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
Ad Space
Ad Space