மதவாச்சி முதல் தலைமன்னார் வரை ரயில் சேவைக்கான பரீட்சார்த்த நடவடிக்கை
Ad Space
Ad Space
மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவையின் பரீட்சார்த்த செயற்பாடுகள் இன்று வெள்ளிக்கிழமை (19) பகல் நடைபெற்றன.
தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கான ரயில் சேவைகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு செல்லும் ரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக குறித்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்த ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டதையடுத்து, தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையிலான ரயில் சேவைகளை ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
அதற்கு அமைவாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19) பகல் மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விரைவில் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space