கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகொல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பலுகொல்ல - கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது.
நீர் மோட்டார் இயந்திரம் ஒன்றிற்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்த வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொடவெஹெர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space