முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வைப் பார்வையிடச் சென்ற ஒருவர், தடைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் இலட்சினைகள் மற்றும் படங்கள் பொறிக்கப்பட்ட டீ-சேர்ட் அணிந்திருந்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், உடுவில் தெற்கு சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அணிந்திருந்த டீ-சேர்ட்டில் இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் இலட்சினைகள் மற்றும் படங்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவரைக் கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இன்று(27.11.2026) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நினைவேந்தலில் பெருந்திரளான மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.