மோட்டார் சைக்கிள் விபத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (9) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் விமானப்படையின் பயிற்சிப் பாடசாலையில் கடமையாற்றிய ஸ்குவாட்ரன் லீடர் (squadron leader) என்கிற பொறுப்பில் இயங்கிவந்த அதிகாரியே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் தனது வசிப்பிடம் அமைந்துள்ள கெப்பித்திகொல்லாவ பகுதியிலிருந்து தற்காலிக தங்குமிடமான தியத்தலாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குறித்த அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் கூறும் தியத்தலாவை பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்