யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா இராஜவிசாகன் இன்று வெள்ளிக்கிழமை (09.10.2026) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நீண்டகாலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளராகப் பதவி வகித்து வந்த வி.காண்டீபன் கடந்த-08 ஆம் திகதி ஓய்வுபெற்றுச் சென்றதையடுத்து எதிர்வரும்- 02 ஆம் திகதி வரை வவுனியாப் பல்கலைக்கழகத்தில் ஏழாட்டை விடுமுறை அனுமதி பெற்றிருக்கும் நடராஜா இராஜவிசாகன் அவரது ஏழாட்டை விடுமுறை நிறைவுறும் வரை அல்லது நிரந்தரப் பதிவாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை இன்று முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பதில் பதிவாளராகக் கடமையாற்றுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.