யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (31) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் திங்கட்கிழமை (30) சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் சடலமாக மீட்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space