யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரின் சடலம் பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என உறவுகள் தேடிக்கொண்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (31) காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
பருத்தித்துறை கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கிராம வாசிகளால் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது கரை ஒதுங்கிய சடலம் அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவருடையது என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பருத்தித்துறை பொலிஸார் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். பருத்தித்துறை கடற்கரையில் வியாபாரி ஒருவர் சடலமாக மீட்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space