யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணொருவர் காணாமல் போயுள்ள நிலையில் மகளைத் தேடி அவரது தாய் அலைந்து வருகிறார்.
குறித்த இளம் பெண் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இறுதியாகக் காணப்பட்டதாகவும், அதன் பின் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் தாயார் தெரிவித்துள்ளார். தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து 22 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை மகள் தொடர்பாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் தாயார் கவலை வெளியிட்டுள்ளார்.