கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொட 7ஆம் கட்டைப் பகுதி இன்று (22) இரவு 10 மணி முதல் நாளை (23) அதிகாலை 2 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (19)  அப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய கன ரக வாகனத்தை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளதாலேயே வீதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழிகள்

கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிய வாகனங்கள்: 

கட்டுகஸ்தோட்டை - மடவளை - வத்தேகமை - உகுவலை - எல்வளை வழியாக A9 வீதியை அடையலாம்.

மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிய கனரக வாகனங்கள்: 

எல்வளை - உகுவலை - வத்தேகமை - மடவளை வழியாக கட்டுகஸ்தோட்டையை அடையலாம்.

இலகுரக வாகனங்கள்: 

அலவத்துகொட - ஓவிஸ்ஸ - பூஜாபிட்டிய - அம்பதென்ன வழியாக கட்டுகஸ்தோட்டையை அடைந்து கண்டி நோக்கிச் செல்லலாம்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஓட்டுநர்களும் பொதுமக்களும் இம்மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.