ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று கிழக்கு பிராந்தியமான அமுரில் செவ்வாய்கிழமை (29) விபத்துக்குள்ளானதில்,  ஆறு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவின் எல்லைக்கு அருகாமையில் அமுர் பிராந்தியத்தில் உள்ள மக்கள் வாழாத பகுதியில், Tu-95  என்ற  ரஷ்ய இராணுவ விமானம் பயிற்சிப் பயணத்தின் போதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவீச்சு விமானம் ஆயுதங்களை ஏற்றி செல்லவில்லை என்று  விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விசாரணை  குழுவினர் அப்பகுதிக்கு விமானத்தில் சென்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

டுபோலேவ் டியூ-95 (Tupolev Tu-95) என்பது அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லவும், ஏவவும், விநியோகிக்கவும் கூடிய ஒரு பெரிய, சோவியத் காலத்து போர்க்கப்பல் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது முதன்முதலில் 1952 ஆம் ஆண்டில்  பறந்ததுள்ளது எனினும் 1956 இல் மட்டுமே இராணுவ சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டு,  பின்  ரஷ்ய இராணுவத்தால் வழக்கமான இராணுவப் பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அன்டோனோவ் ஆன்-24 (Antonov An-24) ரக விமானம் ஒன்று டின்டா (Tynda) நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 48 பேரும் உயிரிழந்துள்ளனர்.