வடக்கு, கிழக்கில் மீண்டும் மழை!
Ad Space
Ad Space
வங்காள விரிகுடாவில் இலங்கைக்குத் தென்கிழக்குத் திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியொன்று உருவாகியுள்ளது.
இது வடக்கு, வடமேற்குத் திசை நோக்கி நகர்கின்றது. இதனால், வெள்ளிக்கிழமை (23.01.2026) முதல் எதிர்வரும்- 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பரவலாக மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா (22.01.2026) தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்- 29 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்குச் சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space