வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவை உதவியாளர்கள் 35 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (16.10.2026) மாலை யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.


கடந்த செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனங்கள் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸவால் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில் கடமையைப் பொறுப்பேற்காமையால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான நியமனங்களே இன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரால் வழங்கப்பட்டன.