வடமராட்சி வலயத்தின் புதிய கல்விப் பணிப்பாளராக இரத்தினம் தமிழ்மாறன் நேற்று வியாழக்கிழமை (15.10.2026) யாழ். பருத்தித்துறையில் அமைந்துள்ள வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இவர் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக 2021 ஜூலை மாதம்- 07 ஆம் திகதி தொடக்கம் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமையுடன் இடமாற்றப்பட்டு வலிகாமம் வலயத்தின் புதிய கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகக் கடமையாற்றி வந்த க.அ.சிவனருள்ராஜா முல்லைத்தீவு வலயத்தின் புதிய கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
