விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி அமைப்பினரும், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையும் இணைந்து முன்னெடுக்கும் பிளாஸ்ரிக் ஒழிப்புச் செயற்திட்ட நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) காலை-07.30 மணி முதல் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தைச் சூழவுள்ள புனிதப் பிரதேசத்தில் நடாத்தப்படவுள்ளது.
வலிகாமம் வடக்கில் மூன்றாம் கட்டமாக நடாத்தப்படவுள்ள பிளாஸ்ரிக் ஒழிப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அனைவரையும் கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.