வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள நேரியகுளம் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி, அதற்கான 88 தோட்டாக்கள் மற்றும் 3 மெகன்சிகள் திங்கட்கிழமை (28) காலை மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் வவுனியா பிரிவு மற்றும் செட்டிகுளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேரியகுளம் பகுதியில் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், T-56 ரக துப்பாக்கி, அதற்கான 88 தோட்டாக்கள் மற்றும் 3 மெகன்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.