நாட்டில் நிலவி வரும் மழைக்கால வானிலையில் படிப்படியாகத் தணிவு ஏற்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வானிலை நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் நிலவி வந்த மழைப்பொழிவு படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் மழைத் தாக்கத்துடன் சேர்த்து வீசி வந்த பலத்த காற்றின் வேகத்திலும் குறைவு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், எதிர்வரும் நாட்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒப்பீட்டளவில் சாதகமான மற்றும் தெளிவான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.