முன்னாள் முதற்பெண்மணியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்பட்ட திடீர் மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்கு எதிர்காலத்தில் மற்றுமொரு திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கட்சிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.