நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - கரைநகர் கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை (01) இரவு கடற்படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பயணித்த படகும், மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடி உபகரணங்ககும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த இந்திய மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
11 இந்திய மீனவர்கள் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space