கொஹுவளை - போதியாவத்த பகுதியில் 16 வயது சிறுமியை சுட்டுக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளில் ஒருவரின் உருவப்படத்தை பொலிஸ் கலைஞர் ஒருவர் வரைந்துள்ளார். அதன்படி, குறித்த வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கொஹுவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 - 8591669
குற்றப்புலனாய்வு திணைக்களம் - 071 - 4146727
கொஹுவளையில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு !-சந்தேகநபரை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் காவல் துறை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space