எதிர்வரும்-19 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இக் காலப் பகுதியில் வடமத்திய, மத்திய, மேற்கு, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மாகாணங்களின் பல பகுதிகளும் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளன இந்த மழை தொடர்ச்சியாகவன்றி இடையிடையே வெயில், இடையிடையே தெளிவான வானம் போன்ற கலவையான வானிலைத் தோற்றப்பாட்டுடனே கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்த மழைவீழ்ச்சியின் போது இடி மின்னல்களும் இடம்பெறும் வாய்ப்புள்ளது.ஆதலால், இடி, மின்னல்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானமாகவிருப்பது அவசியம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீனவர்கள் எதிர்வரும்- 18 ஆம் திகதி வரை கடலுக்குச் செல்வதில் அவதானமாகவிருப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.