13 ஆவது திருத்தச் சட்டம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!

13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தி மாகா­ண­ ச­பை­க­ளுக்­கான தேர்­தலை நடத்த வேண்­டு­மென்று  இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.  கடந்த 21ஆம் திகதி இந்­தி­யப்­பி­ரதமர் நரேந்­தி­ர­மோ­டியை ஜனா­தி­பதி ரணில்­விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்து பேசி­யி­ருந்தார்.

இந்த சந்­திப்­பின்­போது  இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல்­தீர்வு விட­யத்­திலும்   வடக்கு, கிழக்கின் அபி­வி­ருத்­தி­யிலும் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வுள்ள   திட்­டங்கள் தொடர்பில்  ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க  இந்­தியப் பிர­த­ம­ருக்கு  விளக்­கிக்­கூறி­யி­ருந்தார்.

இந்த நிலை­யில்தான் 13ஆவது திருத்தச் சட்­டத்தின் அமு­லாக்­கத்தின் அவ­சியம்  குறித்தும்   மாகா­ண­சபை தேர்­தல்­களை  நடத்­த­ வேண்­டி­யதன் அவ­சரம் தொடர்­பிலும் இந்­திய தரப்பில்   வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.  1987ஆம் ஆண்டு  இலங்கை– இந்­திய ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்டு  13ஆவது திருத்தச் சட்டம்  இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டது. அதன்  மூல­மான  மாகா­ண­சபை முறைமை   இலங்­கையில்  நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

தமி­ழர்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக  இந்­தி­யாவால் முன்­வைக்­கப்­பட்ட இந்த 13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில்   இன்­னமும் இழு­பறி நிலைமை  நீடித்­தி­ருக்­கின்­றது.  மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்கள் 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்­தி­யா­வுக்கு  தொடர்ச்­சி­யான வாக்­கு­று­தி­களை  வழங்கி வந்­தி­ருந்­த­போ­திலும்   நடை­மு­றையில் சாத்­தி­ய­மான  நட­வ­டிக்­கைகள்  இது­வரை எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இலங்­கையில் யுத்தம்  இடம்­பெற்று வந்­த­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் பல்­வேறு நட­வ­டிக்­கைகள்  எடுக்­கப்­பட்டு வந்­தன.  பல்­வேறு தீர்வுத் திட்­ட­மு­யற்­சிகள்   முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  சர்­வ­கட்­சிக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்டு  தீர்வுத் திட்டம் தொடர்பில்  ஆரா­யப்­பட்­டன.  இந்­தியா தனது பங்­க­ளிப்­புக்கு  13ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி தமிழ் மக்­களின்   பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­பட வேண்­டு­மென்று   தொடர்ச்­சி­யாக  வலி­யு­றுத்­தி­வந்­தது.  தற்­போதும் அவ்­வாறே   வலி­யு­றுத்­து­கின்­றது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து  அர­சியல் தீர்வின் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­டது.  யுத்தம்  முடி­வ­டைந்­ததன் பின்னர் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்த அன்­றைய ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக் ஷ அன்­றைய  இந்­தியப் பிர­தமர்  மன்­மோகன் சிங்கை சந்­தித்து பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தார்.

இதன்­போது 13ஆவது திருத்­தத்­துக்கு அப்பால் சென்று  பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண  தயார் என்று அவர்   வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார். ஆனால்  அந்த வாக்­கு­றுதி  அவ­ரது ஆட்சிக் காலத்தில்   நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 13க்கு அப்பால் சென்று  தீர்வை காண்­ப­தற்கு தயார் என வாக்­கு­றுதி அளித்­தி­ருந்த  மஹிந்த ராஜ­பக்ஷ வின் ஆட்­சி­கா­லத்தில் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை குறைப்­ப­தற்­கான முயற்சி  முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால்  இந்­தி­யாவின் தலை­யீட்டை அடுத்தே அந்த முயற்­சியை  அன்­றைய அர­சாங்கம்   கைவிட்­டி­ருந்­தது.

தற்­போது 13ஆவது திருத்தச் சட்­டத்தை  நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தயார் என்று ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அறி­வித்­தி­ருந்தார். அர­சி­ய­ல­மைப்­பி­லுள்ள 13ஆவது திருத்­தத்தை  அமுல்­ப­டுத்த வேண்டும். இல்­லையேல் அது குறித்து சர்­வ­தேசம்  தன்­னிடம்  கேள்வி எழுப்பும்  என்றும்  அவர்   குறிப்­பிட்­டி­ருந்தார்.

பாரா­ளு­மன்­றத்தில்  அர­சியல்  தீர்­வுக்­கான  பேச்­சுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு  ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க பகி­ரங்­க­மாக  கட்சித் தலை­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். அந்த சந்­தர்ப்­பத்தில் சபையில் இருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­விடம்  13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு  ஆத­ரவு வழங்கத் தயாரா என்று  ஜனா­தி­பதி கேள்வி  எழுப்­பி­ய­போது  அதற்கு  அவரும்  சம்­மதம்  வெளி­யிட்­டி­ருந்தார்.

இதே­போன்றே  பாரா­ளு­மன்­றத்­திலும் ஜன­வரி மாதம் இடம்­பெற்ற   சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்திலும் ஐக்­கிய மக்­கள்­சக்­தியின் தலை­வரும்  எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச, ஸ்ரீலங்கா  சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன ஆகியோர் 13ஆவது  திருத்­தத்­துக்கு  ஆத­ரவு  தெரி­வித்­தி­ருந்­தனர்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில்  கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்ற  சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்தில் இதே நிலைப்­பாட்டை இவர்கள் இரு­வரும்  வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இவ்­வாறு தெற்கின் பிர­தான  அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் 13ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு  ஆத­ரவு  தெரி­வித்­துள்ள போதிலும் அதனை இன்­னமும் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாமல் இருப்­பது  பெரும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கவே  அமைந்­துள்­ளது.

தற்­போது 13ஆவது திருத்­தத்தை அமு­லாக்கும் விட­யத்தில்   அர­சாங்கத் தரப்­புக்குள்  முரண்­பட்ட நிலைமை  நீடித்து வரு­கின்­றது. ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க  13ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்த    தயா­ர் என்று அறிவித்திருந்தார்.  அவரும் தற்­போது பொலிஸ் அதி­காரம் தவிர்ந்த  ஏனைய அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான  யோச­னையை   முன்­வைத்­தி­ருக்­கின்றார்.

ஆனால் ஆளும் தரப்பின்   பிர­தான   கட்­சி­யான பொது­ஜன பெர­முன 13ஆவது திருத்த அமு­லாக்கல்  தொடர்பில் முரண்­பா­டான கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றது. அதன் செய­லாளர் சாகர காரி­ய­வசம்  13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு   ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அதி­காரம் இல்லை என்றும் பொலிஸ் அதி­கா­ரத்தை  முன்னைய ஜனா­தி­ப­தி­களும்  நடை­மு­றைப்­ப­டுத்­தாத நிலை­யில்­தற்­போது அதனை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்றும்  கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

சர்­வ­கட்­சிக்­கு­ழுக்­கூட்­டத்­தி­லேயே  இத்­த­கைய கருத்தை அவர் பகி­ரங்­க­மாக  தெரி­வித்­துள்­ள­மை­யா­னது ஆளும்  தரப்பில்   பொது­ஜன பெர­முன கூட  13 ஆவது திருத்­தத்தின் அமு­லாக்­கலை விரும்­ப­வில்லை என்ற தோற்­றப்­பாடு  உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. இந்த விடயம் தொடர்பில் தற்­போது  ஏனைய எதிர்க்­கட்­சி­களும் கேள்வி எழுப்பும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் ஆளும் தரப்­புக்குள் இணக்­கப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று   ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வரும்  முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்றே ஏனைய  எதிர்க்­கட்­சி­களின்  தலை­வர்­களும் கருத்­துக்­களை கூறி­வ­ரு­கின்­றனர். ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்   இந்த விவ­கா­ரத்தை   சுட்­டிக்­காட்டி வரு­கின்­றனர்.

13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த தயார் என்று அறி­வித்­தி­ருந்த ஜனா­தி­பதி இன்று பொலிஸ் அதி­கா­ர­மற்ற   ஏனைய அதி­கா­ரங்­களை  நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தயார் என்று  யோசனை முன்­வைத்­தி­ருக்­கின்றார்.

ஆனாலும் இந்த விட­யத்­தையும்   தான் தனித்து செயற்­ப­டுத்த முடி­யாது என்றும்  சகல தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­டியே   முடி­வினை எடுக்க முடியும் என்றும் அவர் தற்­போது கூறு­கின்றார்.

இதே­போன்­றுதான் 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு  ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக் ஷவின்   தலை­மை­யி­லான கட்­சி­யான பொது­ஜன பெர­முன   தற்­போது தம­து­நி­லைப்­பாட்டை  மாற்றி  கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றது.

இந்த விவ­காரம் தொடர்பில் மூத்த தலை­வரும்  யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு ­வந்­த­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ  தீர்க்­க­மான முடி­வொன்­றினை எடுக்­க­வேண்டும்.

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த  தலை­வ­ரான அவர்  தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான  இந்த சந்­தர்ப்­பத்­துக்கு  உத­வ­வேண்டும். வெறு­மனே  வாக்­கு­று­தி­களை  அளித்­து­விட்டு  அதனை  நடை­மு­றைப்­ப­டுத்­தாது  ஏமாற்றும் செயற்­பா­டு­களில்   இத்­த­கை­ய­வர்கள் ஈடு­ப­டு­வது  ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க நட­வ­டிக்­கை­யல்ல.

தற்­போ­தைய நிலையில் 13ஆவது திருத்தச் சட்­டத்தை வைத்து அர­சி­யல்­ த­லை­மைகள்   விளை­யா­டு­கின்ற  நிலைமை நீடிக்­கக்­கூ­டாது.  தமது அர­சியல்  சுய­ந­லன்­களை அடைந்து கொள்வதற்காக  ஆளும் , எதிர்க்கட்சிகள்  தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரத்தை  பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வது  அவசியமாகவுள்ளது.

தமிழ் மக்களின் அரசில்தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியான 13ஆவது திருத்தச் சட்டத்தை  அமுல்படுத்துவது தொடர்பில்   வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக் ஷ  உட்பட்டோர்  நிறைவேற்றவேண்டும்.  அதேபோன்றே எதிரணியினர் அதற்கான  ஆதரவை வழங்கவேண்டும்.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயும்  குழப்பமான நிலைமை  காணப்பட்டு வருகின்றது.  13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் விவகாரத்தில் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகளும் பொறுப்புணர்வுடன் ஒற்றுமையாக  செயற்படுவதற்கு   முன்வரவேண்டும். ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலைப்பாடுகளில் செயற்படுவதை தவிர்க்கவேண்டும்.  இந்த விவகாரத்தில் சகல தரப்பும்  இதயசுத்தியுடன் செயற்பட்டு  13ஆவது திருத்தத்தையாவது முதலில்  நடைமுறைப்படுத்த   முன்வரவேண்டும் என்பதை  வலியுறுத்த விரும்புகின்றோம்.