கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தையிடம் இருந்து அகற்றப்பட்ட சிறுநீரகம் ஒன்று வைத்தியசாலையின் உறைநிலை குளிர்சாதன பெட்டியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் மூன்று வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (09) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
குழந்தையிடம் இருந்து அகற்றப்பட்ட சிறுநீரகம் ஒன்று வைத்தியசாலையின் உறைநிலை குளிர்சாதன பெட்டியில் இருப்பதாக சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
“சிறுநீரகம் இன்னும் இருப்பதாகவும், உறைநிலை குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பான அறிக்கைகளை நான் சுகாதார அமைச்சிலிருந்து சமர்ப்பிப்பேன்.” என்றார்