அங்கொடை சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்…

அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் தாக்குதல் காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரும் இன்று (29) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஒகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.