அச்சுறுத்தி தனது வங்கிக்கணக்கில் பணத்தை வைப்பிலிடச்செய்த பெண்

திருமண விளம்பரம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி 67 வயதுடைய நபரை அச்சுறுத்தி  69 இலட்சம் ரூபா பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்த  57 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவ தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படும் 26 மற்றும் 32 வயதுடைய இருவர் சந்தேகத்தின் பேரில் இந்தப் பெண்ணுடன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கண்டி  கண்ணொருவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்தேக நபர்கள் இருவரும்  ஈரியகம மற்றும் முருத்தலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.