ஆனைக்கோட்டையில் இரு பாடசாலைகளின் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

யாழ்.ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாசாலை, ஆனைக்கோட்டை குணபாலன் வித்தியாசாலை ஆகிய ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் பாதுகாப்புச் சட்டங்கள், தொடுகை முறைகள், முறைப்பாட்டுப் பொறிமுறை, போதையற்ற மகிழ்ச்சியான குடும்பம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(15.08.2023) இடம்பெற்றது.

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.