அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட ஆயுர்வேத(திருத்தம்) எனும் சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் பெறப்படுவதுடன் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது.
அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட ஆயுர்வேதம் (திருத்தம்) எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
இதற்கமைய ‘ஆயுர்வேதம் (திருத்தம்)’ எனும் சட்டமூலத்தின் பல வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் பெறப்படுவதுடன் மக்கள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது.
(1) சட்ட மூலத்தின் 2, 3, 27, 29 ,30, 31, 32, 33, 34, 35,36, 37, 39, 40 மற்றும் 41 வாசகங்கள் அரசியலமைப்பின் 9 ஆம் உறுப்புரையுடன் முறணாவதுடன் 84 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவைப்படுத்தப்பட்ட விசேட பெரும்பான்மை வாக்குகளுடனும் மற்றும் 83 ஆம்உறுப்புரையின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் மக்கள் தீர்ப்பொன்றின் மூலமும் மாத்திரமே நிறைவேற்ற முடியும்.
அத்துடன், சட்ட மூலத்தின் 2, 3, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 39, 40 மற்றும் 41 ஆம் வாசகங்களில் ‘ஆயுர்வேத பைசஜ்ஜக’ மற்றும் ‘பைசஜ்ஜக’ ஆகியசொற்களை நீக்குவதன் மூலம் திருத்தம் செய்தால் முரண்பாடு நீங்கும் (2) சட்டமூலத்தின் 46 (4) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையுடன்முறணாவதுடன் 84 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவைப்படுத்தப்பட்ட விசேட பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.உயர்நீதிமன்ற தீர்மானத்தின் 53 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் திருத்தங்களை சட்டமூலத்தில் மேற்கொண்டால் இந்த முரண்பாடு நீங்கும்.
(3) சட்டமூலத்தின் 11 (3) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன்முறண்படுவதுடன் 84 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவைப்படுத்தப்பட்ட விசேட பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.உயர்நீதிமன்ற தீர்மானத்தின் 54 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் திருத்தங்களைசட்டமூலத்தில் மேற்கொண்டால் இந்த முரண்பாடு நீங்கும்.
(4) பிரதான சட்டத்தை திருத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் ஏனைய விடயங்களில்இ பிரதான சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவின் (உ) மற்றும் (ஊ) உப பிரிவுகள் நீக்கப்பட்ட சட்டமூலத்தின் 13 ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதுடன் 84 உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவைப்படுத்தப்பட்ட விசேட பெருபான்மை வாக்குகளினால் மாத்திரமேநிறைவேற்றிக் கொள்ள முடியும். பிரதான சட்டத்தின் 13 (1) ஆம் வாசகத்தின் (உ) மற்றும் (ஊ) உப பிரிவுகளை நீக்காவிட்டால் இந்த முரண்பாடு நீங்கும்;
(5) சட்டமூலத்தின் 24(1) (அ) இ 25 மற்றும் 46 (2) ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12 (1) உறுப்புரையுடன் முரண்படுவதுடன் 84 உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவையான விசேட பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.அவ் வாசங்களை நீக்குவதன் மூலம் முரண்பாடு நீங்கும்; மற்றும் (6) சட்டமூலத்தின் 46 (1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையுடன்முரண்படுவதுடன் 84 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவையான விசேட பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் 55 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தங்களை சட்டமூலத்தில் மேற்கொண்டால் இந்த முரண்பாடு நீங்கும்.